காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம பகுதியில் புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையில் புகையிரத கடவ‍ையை கடக்க முற்பட்ட வேளை‍யே மேற்படி மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியுள்ளது. இதனால் மோட்டார் சைக்களின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் கரப்பிட்டிய வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய புஸ்ஸ, பரணவத்த பகுதியைச் சேர்ந்தவராவார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.