பேஸ்புக் நிறு­வுனர் மார்க் சக்­கர்பேர்க் உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் வாரென் பபெட்டை பின்­னுக்குத் தள்ளி மூன்­றா­வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார்.

உலக பணக்­கா­ரர்கள் பட்­டியலில் அமேசன் நிறு­வுனர் ஜெப் பெசோஸ் மற்றும் மைக்­ரோசொப்ட் நிறு­வுனர் பில் கேட்ஸ் முறையே முதல் மற்றும் இரண்­டா­வது இடங்­களில் உள்­ளனர். பங்குச் சந்­தையில் பேஸ்புக் நிறு­வன பங்­குகள் 2.4 சத­வி­கிதம் வளர்ச்­சி­ய­டைந்­ததைத் தொடர்ந்து அதன் நிறு­வுனர் மார்க் சக்­கர்பேர்க் பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் முன்­னேற்றம் அடைந்­தி­ருக்­கிறார்.

உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலின் முதல் மூன்று இடங்­களில் தொழில்­நுட்பத் துறையை சேர்ந்­த­வர்கள் பிடித்­தி­ருப்­பது இதுவே முதல் முறை­யாகும். உலகின் மூன்­றா­வது பணக்­காரர் ஆன மார்க் சக்­கர்­பர்க்கின் சொத்து மதிப்பு தற்­ச­மயம் 8160 கோடி டொலர்கள் என கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இது வாரென் பபெட்டின் சொத்து மதிப்பை விட  37.3 கோடி டொலர்கள் அதிகமாகும்.