எம்முடைய இல்லங்களுக்கு ஆண்டுகொரு முறையாவது வண்ணம் பூசுவோம். அதன் போது பயன்படுத்தப்படும் வரணப்பூச்சி மற்றும் சில கரைப்பான்களை சுவாசிப்பதால் அல்லது சுவாசிக்க நேர்வதால் Multiple Sclerosis என்ற பாதிப்பு ஏற்படுவது ஐம்பது சதவீதம் அதிகரிப்பதாக அண்மையில் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

Multiple Sclerosis என்பது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் உள்ள நரம்பு செல்கள் உறைந்துவிடும் நிலை. பொதுவாக சிகரெட் புகைப்பவர்களை விட அவருக்கு அருகில் நின்று அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு 30 சதவீதம் அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு ஐரோப்பியே நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மட்டும் இத்தகைய பாதிப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது தெற்காசியாவிலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் முழுமையாக முடக்கப்பட்டுவிடும். இதற்கான சிகிச்சைக்கு அதிக கட்டணம் செலவாகிறது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

உடலிலுள்ள மூட்டுகள் ஒன்றோ அல்லது அதைவிட அதிகமான மூட்டுகளிலோ உணர்வு குறையும். பார்வைத்திறன் பகுதியளவு அல்லது முழுமையாக பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு பார்ப்பது இரட்டையாகத் தோன்றக்கூடும். 

கூச்ச உணர்வு அல்லது மயிர் கூச்செறியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழலாம். நா குழறல், சோர்வு, லேசான மயக்கம், குடல் மற்றும் சிறுநீர் பையின் செயல்பாட்டில் மாற்றம் என ஏதேனும் அறிகுறிகளின் மூலம் இதனை கண்டறியலாம்.

இதனை குணப்படுத்துவதற்கான சிகிச்சை இருக்கிறதே தவிர இதனை தடுப்பதற்கான சிகிச்சை இன்றும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே இதற்கான சிறந்த மாற்று. சத்தான உணவுகள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதை இயல்பாக வைத்திருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் இதனை தவிர்க்கலாம்.

டொக்டர் சைமன்

தொகுப்பு அனுஷா.