இலங்கையிலிருந்து போலிக் கடவுச்சீட்டு மூலம் டுபாய் மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கு சென்றிருந்த இரண்டு நபர்களை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் போலி தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்களை பெற்று டுபாய் மற்றும் ஜேர்மனி ஆகிய நாட்டிற்கு சென்றிருந்த வேளை அங்கிருந்து  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொரள்ளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயது மற்றும்  பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடையவர்களே நேற்று மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.