பாகிஸ்தானின் சிந்து மாகாண சபைக்கு நடக்க உள்ள பொதுத்தேர்தலில்  இந்து பெண் போட்டியிடுவதன் மூலம், வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானில் இம்மாதம்  25ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மேலும், மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது. 

சிந்து மாகாண சபையில் உள்ள சிந்து சட்டமன்ற தேர்தலில் சுனிதா பார்மர் என்ற இந்து பெண் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதன்மூலம் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சிந்து தொகுதி அமைந்துள்ள மாவட்டத்தில் அதிகளவில் சிறுபான்மையினரான இந்துக்கள் வசிக்கின்றனர். இதனால், தனக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பார்மர் தெரிவித்துள்ளார்.