குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி இன்று நிறுத்தம்

Published By: Daya

07 Jul, 2018 | 11:13 AM
image

தாய்லாந்தில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

திடீரென பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 

முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று  மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

மீட்பு பணி வீரர் உயிரிழந்ததன் மூலம் அந்தக் குகைக்குள் ஒக்ஸிஜன் அளவு அபாயகரமான அளவில் குறைந்து வருவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே,  குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், அப்பகுதியில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று மீட்பு பணி நடைபெறாது என்று  சியாங் ராய் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47