குடிபோதையில் கார் ஓட்டியதாக பாரதி ராஜாவின் மகன் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

பிரபல சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பி.எம்.டபிள்யூ. சொகுசு காரில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் வீதியில் சென்ற போது காரை அவரே ஓட்டினார். கார் தாறுமாறாக வேகமாக வந்ததால் போக்குவரத்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

காரை மடக்கி விசாரித்தார்கள். அப்போது நடிகர் மனோஜ் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவருக்கு 2,500  ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. 

மனோஜ் ஓட்டி வந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மனோஜ், சாரதியை அனுப்பி காரை எடுத்துச் செல்லலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.