மலை­ய­கத்தில் திட்­ட­மிட்டு மலை­யக மக்­களின் சனத்­தொ­கையை குறைப்­ப­தற்­காக கருத்­த­டைகள் முன்­னெ­டுக்கப்ப டுவதாக நேற்று வியா­ழக்­கி­ழமை சபையில் குற்­றம்­சாட்­டிய கூட்டமைப்பு எம்.பி. சி.ஸ்ரீதரன், தேயிலைச் செடிகள் வளர வளர கவ்­வாத்துச் செய்­யப்­ப­டு­வது போல் மலை­ய­கத்தின் கல்வி வெட்­டப்­ப­டு­கின்­றது என்றும் கவலை தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற மலை­யக மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாடு மற்றும் வாழ்க்கை தர உயர்வு தொடர்­பாக ஜே.வி.பி எம்.பி அநுரகுமார திஸாநாயக்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்­தி­வைப்பு விவா தத்தில் உரை­யாற்றும் போதே ஸ்ரீதரன் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,இரண்டு கோடி மக்கள் வாழும் இலங்கை நாட்டில் மலை­யக பெருந்தோட்ட மக்கள் 10 இலட்­சத்­திற்கும் மேல் வாழ்­கின்­றனர்.

இவர்கள் இலங்­கையின் தேசிய இன மாவர். ஆனால் அவ்­வி­னத்­தி­லி­ருந்து 120 பேர்­கள்தான் பல்­க­லைக்­க­ழகம் போகின்­றனர். இது அநீ­தி­யாகும். அவர்­க­ளது கல் வித் தரம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. அவர்­க­ளுக்கு கல்­வித்­து­றையில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.

மலையக மக்­களின் பிரச்­சி­னைகள் தொட ர்­பாக பேசப்­ப­டு­கி­றது. ஆனால் தீர்­வுகள் பெற்றுக் கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை.

மலை­யக பெருந்­தோட்ட மக்கள் ஒரு தேசிய இனம் ஆனால் அவ்­வி­னத்­திற்­கான சொந்த காணி­யில்லை. சொந்த வீடுகள் இல்லை. ஒரு தேசிய இனம் காணி­யில்­லாது அநா­தை­க­ளாக்­கப்­பட்ட இன­மாக வாழ்­கின்­றது. மலை­ய­கத்தில் தமிழ் மொழி மறுக்­கப்­ப­டு­கி­றது. சிங்­கள மொழி திணிக்­கப்­ப­டு­கின்­றது. இன்று இம்மக்கள் குழுமத்தின் சனத் தொகையை குறைப்பதற்கு திட்டமிட்டு கட் டாய கருத்தடை மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஸ்ரீதரன் எம்.பி தெரிவித்தார்.