மத்தல விமானநிலையத்தை இந்தியா இயக்கும் என சிவில்விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய கூட்டு முயற்சியாக மத்தல விமானநிலையம் இயக்கப்படும்,இந்த கூட்டு முயற்சியில் இந்தியாவிடமே அதிகளவு பங்குகள்  காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

20 மில்லியனிற்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ள அழிந்துகொண்டிருக்கின்ற விமானநிலையத்திற்கு புத்துயுர்வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பிலான இறுதிமுடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவையும் சீனாவையும் திருப்திபடுத்துவதற்காகவா மத்தல விமானநிலையத்தையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் வழங்குகின்றீர்கள் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கனகா ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் அமைச்சர் நிமால் சில்வா இதனை நிராகரித்துள்ளார்.