தமிழகத்தில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது -தினகரன் 

Published By: Daya

06 Jul, 2018 | 03:18 PM
image

தமிழகத்தில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி நடப்பதாக எடப்பாடி கூறுகிறார். 

இது அம்மாவின் ஆட்சியே கிடையாது. 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். 

குறித்த வழக்கால், எடப்பாடி அரசு தப்பித்து கொண்டிருக்கிறது. சென்னை-சேலம் எட்டு வழி பசுமை விரைவு வீதிக்கு மத்திய அரசு மும்முரம் காட்டுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வீதி  திட்டத்தை போராடி பெற்றதாகவும், குறித்த சாலை அமைந்தால் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற் வளர்ச்சி பெருகும் என ஒரு முறை தெரிவித்தார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, பசுமை வீதி மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். மாநில அரசு நிலத்தை ஆர்ஜிதம் மட்டுமே செய்து கொடுக்கிறது என்றார். இப்போது எடப்பாடி பழனிசாமி மாறி மாறி பேசுகிறார். 

கடந்த பெப்ரவரி மாதமே பசுமை வீதி திட்டத்தை செயற்படுத்த எடப்பாடி அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. 

அதன்பிறகே மத்திய அரசு வீதி அமைக்கும்பணியை தொடங்கியது. பசுமை வீதி அமைக்க அவசரம் எதற்கு? விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து தான் போராடுகின்றனர். அவர்களை யாரும் தூண்டி விடவில்லை. 

நீர் நிலைகள், மலைகள், இயற்கையை அழித்து பசுமை வீதியை அமைப்பது என்பது சரியான திட்டமாக தெரியவில்லை. ஒரு  ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

விவசாயிகளிடம் பொலிஸார் கடுமையாக நடந்து கொள்கின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை சந்தித்து திட்டம் குறித்து விளக்கியிருக்க வேண்டும். 

பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலத்தை விட்டுக் கொடுக்க யாருக்கும் மனசு வராது. அரை ஏக்கர் நிலத்திற்காக உச்சநிதிமன்றம் வரை செல்லும் சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். 

பசுமை வீதியை அமைக்க மும்முரம் காட்டும் எடப்பாடி அரசு, அதே வேகத்தில் நீட் தேர்வில் விலக்கு கொண்டு வர மத்திய அரசிடம் போராடி இருக்க வேண்டும்.

 விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்று எடப்பாடி கூறி கொள்கிறார். ஆனால், விவசாயிகளின் கஷ்டங்களை அவர் அறியவில்லை. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. 

குறித்த வீதியை விரிவுப்படுத்தினாலே போதும். பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்கு போடுகின்றனர். குரல் வளையை நெரிக்கின்றனர். தமிழகத்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25