ஜப்பானின் நீதியமைச்சினால் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரிற்கு புகலிடம் வழங்குமாறு டோக்கியோவின் மாவட்ட நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

2006 ம் ஆண்டு ஜப்பானில் புகலிடம் கோரி விண்ணப்பித்த நபரிற்கு சாதகமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறிப்பிட்ட நபர் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை அவரிடம் உரிய விசா இல்லாததால் ஜப்பானில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்

அதனை தொடர்ந்து அவர் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளார்.

எனினும் 2006 டிசம்பரில் இவரது புகலிடக்கோரிக்கையை ஜப்பான் நிராகரித்துள்ளது.

இதன் பின்னர் இந்த நபர் 2007 இல் ஓசாகா மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.அந்த நீதிமன்றம் 2011 இல்  குறிப்பிட்ட இலங்கை தமிழருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனினும் நீதிமன்ற தீர்ப்பினை ஜப்பானின் நீதியமைச்சு ஏற்க மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த நபர் ஜப்பான் அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல்செய்த மானநஸ்ட வழக்கை விசாரணை செய்துள்ள நீதிமன்றம் குறிப்பிட்ட நபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து எற்படலாம் என தெரிவித்துள்ளது.