சட்டரவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் மூலம் 724 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ண தெரிவித்தார்.

மேற்படி இந்த வருமானமானது கடந்த 6 மாத காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கிடைத்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் இதனை ஒப்பிடும்போது இவ் வருமானமானது நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.