இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின், சோபியா கார்டண்ஸில் மைதானத்தில் ஆரம்பகவுள்ளது.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந் நிலையில் இந்தியா மற்றும் இலங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி கடந்த 05 ஆம் திகதி இலங்கிலாந்தின் மென்செஸ்டர் மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றயீட்டியது.

இந் நிலையில் இன்று சோபிய கார்டண்ஸில் இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியாது இன்றிரவு இலங்கை நேரப்படி 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அந்த வகையில் விராட் கோஹ்லி தல‍ைமையிலான இந்திய அணி சார்பாக ஷெய்கர் தவான், ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரய்னா, மகேந்திரசிங் தோனி, ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சாஹல், தினேஷ் கார்த்திக், மனிஸ் பாண்டியா, குருனல் பாண்டியா, தீபக் சாஹர் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியார் விளையாடவுள்ளனர்.

மொர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சார்பாக ரோய், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹலிஸ், ஜோனி பைஸ்ட்ரோ, ஜோரூட், மோஹின் அலி, டேவிட் வில்லி, கிரிஸ் ஜோர்தன், லியாம் பிளன்கட், ரஷித், ஷேம் குரன், டெவிட் மலன மற்றும் ஜேக் போல் ஆகியோர் விளையாடவுள்ளனர்.