லெப­னானில் பெய்ரூட் நகரின் வட மேற்­கே­யுள்ள ஜடி­யடெஹ் பிராந்­தி­யத்­தி­லுள்ள வீதிகள் நெடு­கிலும் ஆறு போன்று குப்பைப் பொதிகள் குவிந்­துள்­ளதை படத்தில் காணலாம்.

அந்­நாடு பிர­தான குப்பை கொட்­டப்­படும் தள­மொன்றை கடந்த வருடம் ஜூலை மாதம் மூடி­யி­ருந்­தது. இந்­நி­லையில் அந்தக் குப்­பை­களைக் கொட்­டு­வ­தற்­கான மாற்று இட­மொன்றை அந்நாட்டு குப்பையகற்றும் நிறுவனம் வழங்கத் தவ­றி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் அந்த குப்­பை­களை ரஷ்­யா­வுக்கு அனுப்­பு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட திட்டம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது.

குப்­பை­களை ரஷ்­யா­வுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த குறிப்­பிட்ட நிறு­வனம் அது தொடர்பில் உரிய ஆவ­ணங்­களை சமர்ப்­பிக்கத் தவ­றி­ய­தை­ய­டுத்து ஏற்­று­ம­திக்­காக பொதி செய்­யப்­பட்ட குப்பைகள் துறை­முகப் பகு­தி­யி­லி­ருந்து வீதி­களில் மலை போன்று குவிந்­துள்­ளன.

இது தொடர்பில் லெப­னா­னிய அபி­வி­ருத்தி மற்றும் மீள்­கட்­ட­மைப்பு சபையின் பேச்­சாளர் மோனா காலொட் தெரி­விக்­கையில், எமக்கு இது தொடர்பில் தீர் ­வொன்றைப் பெற முடியாதுள்ளது. இந்தக் குப்பைகளை லெபனானுக்கு வெளியில் அனுப்ப முடியும் என எனக்குத் தோன்ற வில்லை" என்று கூறினார்.