மன்னார்- இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்- இரணை இலுப்பைக்குளம் காட்டுப் பகுதிக்கு விலங்குகளை வேட்டையாடுவதற்கு இருவர் சென்றுள்ளனர்.

இதன் போது மாலை 6.00 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி 40,46 வயதுடைய இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.