ஆசியக் கிண்­ணத்தில் நேற்று நடை­பெற்ற இலங்கை – ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் 14 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் இலங்கை அணி வெற்­றி­பெற்­றது.

இதில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் களத்­த­டுப்பை தெரி­வு­செய்­தது. அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து வெறும் 129 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொண்­டது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக தில­க­ரத்ன டில்ஷான் மற்றும் தினேஷ் சந்­திமால் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த இரு­வரும் ஆரம்­பத்தை சிறப்­பாக கொடுக்க இலங்கை அணி 5 ஓவர்­களில் 50 ஓட்­டங்­களைத் தாண்டி நின்­றது.

சிறப்­பாக ஆடிக்­கொண்­டி­ருந்த டில்ஷான் தனது டில்ஸ்கூப் மூலம் பந்தை வெளியே விரட்ட இரண்டு மூன்­று­முறை முயன்றும் கடை­சியில் முயற்சி தோல்­வி­யில்தான் முடிந்­தது. அதேபோல் ரிவஸ் சுவிப் அடிக்க முற்­பட்டும் அவரால் முடி­யாமல் போனது. இறு­தியில் 27 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த வேளையில் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார்.


Sri Lanka vs UAE Asia Cup 2016 Highlights by leokhanleo

மறு­முனையில் நின்ற தினேஷ் சந்­திமால் சற்று அதி­ர­டி­யாக ஆடி­வந்தார். குறிப்­பிட்டுச் சொல்ல வேண்­டுமானால் தினேஷ் சந்­தி­மாலின் ஓட்ட எண்­ணிக்­கை­யால் தான் அணியின் ஓட்ட எண்­ணிக்கை 129 ஓட்­ட­ங்களை எட்­டி­யது.

இதில் தினேஷ் சந்­திமால் 55 பந்­து­க­ளுக்கு முகம் கொடுத்து 7 பவுண்­ட­ரிகள் மற்றும் ஒரு சிக்­ஸ­ருடன் 50 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார். இந்த இரு­ப­துக்கு 20 போட்­டியில் தினேஷ் சந்­தி­மால்தான் இலங்கை அணி சார்­பாக ஒரு சிக்ஸர் விளா­சினார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்­த­டுத்து வந்த ஜய­சூ­ரிய மற்றும் கபு­கெ­தர ஆகியோர் தலா 10 ஓட்­டங்கள் வீதம் பெற ஏனைய வீரர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் ஆட்டமிழந்தனர். இறு­தியில் இலங்கை அணி 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 129 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

130 என்ற சொற்ப ஓட்ட இலக்­குடன் கள­மி­றங்­கிய ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸிற்கு முதல் பந்­தி­லேயே அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. வெற்றி இலக்கை விரட்ட கள­மி­றங்­கிய ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு எதி­ராக முதல் ஓவரை வீச வந்தார் இலங்கை அணித் தலைவர் லசித் மலிங்க. இவரின் முதல் பந்­தி­லேயே ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் முஸ்­தபா ஆட்­ட­மி­ழந்து அதிர்ச்­சி­ய­ளித்தார். அதன்­பி­றகு அதே ஓவரில் கடைசி பந்தில் ஷாட் ஆட்­ட­மி­ழக்க முதல் ஓவரில் இரண்டு விக்­கெட்­டுக்­களை இழந்து 2 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது ஐக்­கிய அரபு எமிரேட்ஸ்.

அதன் பிறகு 4 விக்­கெட்­டுக்கள் அடுத்­த­டுத்து விழ ஒரு கட்­டத்தில் எமிரேட்ஸ் 50 ஓட்­டங்­களைத் தாண்­டுமா என்­பதே சந்­தே­க­மாக இருந்­தது. ஆனாலும் 6ஆவது விக்­கெட்­டிற்­காக கள­மி­றங்­கிய பட்டில் நிதா­ன­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை உயர்த்­தினார். இவர் 3 பவுண்­ட­ரிகள், 2 சிக்­ஸர்கள் அடங்­க­லாக 37 ஓட்­டங்­களைப் பெற்றார்.

இறு­தியில் எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 115 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று 14 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­வி­யது.

இலங்கை அணி சார்­பாக பந்­து­வீ­சிய லசித் மலிங்க 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்தி அசத்தினார்.

குலசேகர 3 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.