எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவன் பாடசாலைக்கு சென்று வீடு திருப்பாமையினால் பெற்றோர் அவரை தேடிய போது பாடசாலைக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

மேலும் குறித்த சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.