வடக்கில் மக்களின் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,   

வடக்கில் குறிப்­பாக யாழ்.குடா­நாட்டில் வன்­மு­றை­களும் குற்­றச்செ­யல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. ஆறு வயது சிறுமி படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 59 வய­தான வயோ­திப பெண் பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் வீட்டில் கொள்­ளையும் இடம்­பெற்­றுள்­ளது. வாள்­வெட்டு சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. போதை­வஸ்து பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் மக்­களின் துன்­பங்­களை தாங்­க­ மு­டி­யாது புலி­களின் காலத்தை நினை­வூட்ட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. 

ஆறு வயது சிறு­மியின் படு­கொலை உட்­பட வன்­மு­றைகள் குடா­நாட்டில் அதி­க­ரித்து  வரு­வ­தனால் மக்கள் அச்­சத்தின் மத்­தியில் வாழும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் நிம்­ம­தி­யின்றி வாழ்­கின்­றனர். இந்த நிலையில் மக்­களின் துன்­பங்­களை வெளிக்­கொ­ணர வேண்­டி­யது அவர்­க­ளது பிர­தி­நி­தி­யான எனது கட­மை­யாகும். இத­னால் தான் மக்­களின் துன்­பங்­களை வெளிக்­கொண்டு வரும் வகையில் எனது கருத்­தினை தெரி­வித்­தி­ருந்தேன். 

மக்­களின் துன்ப துய­ரங்­களை பறை­சாற்­றாது மக்­களின் பிர­தி­நி­தி­யாக இருக்க முடி­யாது. இத­னால் தான் வட­ப­குதி மக்­களின் துன்­பங்­களை எடுத்­துக்­கூறும் வகையில் உரை­யாற்­றி­யி­ருந்தேன். இந்த  கருத்து தென்­ப­கு­தியில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையால் இவ்­ வி­டயம் தொடர்பில் கட்­சி ­த­லை­மைக்கு விளக்கம் அளித்­துள்ளேன். 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிர­த­மரும் கட்சித் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க நான் யாழ்ப்­பா­ணத்தில் தங்­கி­யி­ருந்­த­போது என்­னுடன் தொடர்­பு­ கொண்டு எனது கருத்து குறித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது எனது நிலைப்­பாட்­டினை அவ­ருக்கு விளக்கி கூறினேன். எனது கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மையால் வேண்­டு ­மானால் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­நாமா செய்­வ­தற்கு நான் தயா­ரா­க­வுள்­ளதாக பிர­த­ம­ரிடம் எடுத்­துக்­கூ­றினேன். ஆனால்அதனை அவர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 

இதன்பின்னர்  கொழும்பு திரும்­பிய நான் புதன்­கி­ழமை மாலை பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் வடக்கில் குறி

ப்­பாக குடா­நாட்டில் இடம்­பெற்று வரும் போதைப்­பொருள் பாவனை, வன்­மு­றை கள், படு­கொ­லைகள் தொடர்பில் எடுத்­துக்­கூ­றி­ய­துடன் மக்­களின் துன்­பங்­களை பொறுக்க முடி­யா­மை­யால்தான் அவ்வாறு உரை­யாற்­றி­ய­தாக விளக்­க­ம­ளித்தேன். தற்­போது எனது உரை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­மையால் கட்­சியின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் தற்­கா­லி­க­மாக அமைச்சு பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நான் தயார் என்றும் பிர­த­ம­ரிடம் எடுத்து கூறினேன். 

இதற்­கி­ணங்­கவே எனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளேன். என்னை தெரி­வு­ செய்த மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிக்­கொ­ணர வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். மக்கள் துன்­பத்­திலும் துய­ரத்­திலும் இருக்­கின்­ற­ போது நாம் எத­னையும் செய்­யாது வேடிக்கை பார்க்க முடி­யாது. இத­னால் தான் மக்­களின் துன்­பங்­களை எடுத்­துக்­கூற முயன்றேன். இதனால் தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ள­தனால் எனது அமைச்சுப்பத­வி­யை மக்­க­ளுக்­காக மகிழ்ச்­சி­யுடன் இரா­ஜி­னாமா செய்­துள்ளேன். 

எனது மக்­க­ளுக்­காக குரல் எழுப்­பி­யமை தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பி­லான எத்­த­கைய விசா­ர­ணை­க­ளையும் எதிர்கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றேன். வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கா­கவும் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­க­வுமே தெரி­வு­ செய்­துள்­ளனர். இந்நிலையில் அவர்கள் துன்­பப்­ப­டும் ­போது நாம் பேசா­தி­ருக்க முடி­யாது. 

வடக்கில் அதி­க­ரித்­துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வ றான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். ஆறு  வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது. மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் பெருமை கொள்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.