எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,  தற்போது 137 ரூபாவாக விற்கப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 118 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில , சூப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 129 ரூபாவாகும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் குறித்த  எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.