இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டியில் பாகிஸ்தான் அணி பங்­கேற்­பதில் பாது­காப்பு பிரச்­சினை இருப்­ப­தா­கவும், தங்கள் அரசின் அனு­ம­தியை பொறுத்தே போட்­டியில் கலந்து கொள்­வது குறித்து முடிவு செய்­யப்­படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறி­வித்து இருந்­தது.

இந்­நி­லையில் போட்­டி யில் பங்­கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்­நாட்டு அரசு அனு­மதி அளித்­துள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷஹா­ரியார் கான் தெரி­வித்­துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறு­கையில்,

“பாகிஸ்தான் அணி இந்­தி­யா­விற்கு சென்று உலகக் கிண்­ணத்தில் பங்­கேற்க அரசு அனு­மதி கொடுத்­துள்­ளதை மகிழ்ச்­சி­யுடன் தெரி­வித்­துக்­கொள்­கிறேன் என்று கூறியுள்ளார்.