எம்முடைய இல்லங்களில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தவர்களும் அவர்களின் உயரத்திற்கேற்ற உடல் எடையில் இல்லை. மாறாக  உடல் எடை கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

நாளாந்தம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, உடலுழைப்பு போன்றவை இயல்பை விட குறைவாக இருப்பதே காரணம் என்பதை அவர்களும் ஒப்புக்கொள்வார்கள். அதனால் உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கும் தற்போது உடல் எடையை குறைப்பதற்காக இருக்கும் Raw Food Diet. Ketogenic Diet, Alkaline Diet, Dukan Diet,Cooking Light Diet, DASH Diet, Mediterranean Diet, Keto Diet, Vegan Diet, Flexitarian Diet, Intermittent Diet, Low FODMAP Diet. Paleo Diet என ஏராளமான உணவு முறைகளில் எதனை பின்பற்றுவது என்பதில் குழப்பமடைகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு எந்த உணவு முறை, யாருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை வைத்திய  நிபுணர்களால் தான் நோயாளிகளுக்கு சரியாக வழிகாட்ட முடியும்.

உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்றால் சரியான உணவு முறையையும், பொருத்த வாழ்க்கை நடைமுறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதே சமயத்தில் ஒவ்வொருவரின் உயரத்தைப் பொறுத்து, அவர்களின் உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டுமோ, அதனை சீராக பராமரிக்கவேண்டும். அதே சமயத்தில் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான  உணவையும் உட்கொள்ளவேண்டும்.

உடல் எடையை சீராக பராமரிக்கும் போது உடல் எடையின் அதிகரிப்பால் ஏற்படும் நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோய், இதய பாதிப்பு ஆகியவற்றை வராமல் தற்காத்துக் கொள்வதுடன் ஆரோக்கியமாகவும் வாழ இயலும்.