கொட்டாஞ்சேனை - ஹெட்டியாவத்த தொடக்கம் இப்பகாவத்த சந்தி வரையில் வாகன போக்குவரத்து நாளைய தினம் (06-07-2018) மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாளை இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நீர் குழாய்கள் பராமரிப்பு காரணமாகவே இவ்வாறான போக்குவரத்தினை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.