பார்வை அற்ற பெண்ணாக நடிகை வரலட்சுமி நடிக்கவிருக்கிறார்.

 தமிழ் திரையுலகில் நீயா=2, வெல்வெட் நகரம், சர்கார், கன்னிராசி, சண்டக்கோழி=2 மற்றும் நாளைக் வெளியாகிவிருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி என ஏழுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை வரலட்சுமி.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஜே. கே. என்பவரின் இயக்கத்தில் தயாராகும் நடிகை வரலட்சுமி ?  என்ற படத்தில் பார்வை சவாலுள்ள பெண்ணாக நடிக்கிறார். இதன் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குனர் ஜே.கே.விடம் கேட்டபோது,‘ இது ஒரு கதையின் நாயகியை மையப்படுத்திய எக்சன் எண்டர்டெயின்மெண்ட் ஜேனர் படம். இதில் நடிகை வரலட்சுமி கண்பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.

சாம் சி. எஸ். இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.’ என்றார்.