தாய்­லாந்தில் வசிக்கும் யுவ­தி­யொ­ருவர், தனது கண­வரின் ஆணு­றுப்பைத் துண்­டித்து ஜன்­ன­லுக்­கூடாக வெளியே எறிந்­த­தாக ஒப்­புக்­கொண்­டுள்ளார். தாய்­லாந்து தலை­நகர் பேங்­கொக்­குக்கு அரு­கி­லுள்ள ஸ்ரீரச்சா நகரில் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை காலை  இச்­சம்­பவம் இடம்­பெற்றுள்ளது.

தனது கண­வ­ருக்கு வேறு பெண்­ணுடன் தொடர்­பி­ருந்­ததால் தான் இவ்­வாறு செய்­த­தாக 24 வய­தான கருணா சனுசன் எனும் இந்த யுவதி கூறினார் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இவ்யுவதி கத்­தியால் துண்­டிக்­கப்­பட்ட ஆணு­றுப்பை படுக்­கை­யறை ஜன்­ன­லுக்­கூ­டாக வெளியே எறிந்தார்.

இவரின் கண­வ­ரான 40 வய­தான நபர் வலி­யினால் கூச்­ச­லிட்ட நிலையில் அய­ல­வர்கள் உத­விக்கு வந்­தனர். பின்னர் பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுக்­கப்­பட்­டது. அதன்பின், காய­ம­டைந்த நபர் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டார்.

துண்­டித்து எறி­யப்­பட்ட ஆணு­றுப்பை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். எனினும், அதை மீளப் பொருத்த முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.