நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய்க்கு விரைவில் 2ஆவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014இல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இயக்குனர் விஜய் பிரபுதேவா நடிக்கும் லட்சுமி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். 

பிரிவு குறித்து இயக்குனர் விஜய் தெரிவித்ததாவது, 

“நம்பிக்கை, நேர்மை இல்லாது வாழ்வதில் பயன் இல்லை. எங்கள் பிரிவுக்கு இதுவே காரணம். இயல்பாகவே சமுதாயத்தின் மீதும் பெண்கள் மீதும் அதிக அக்கறை கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெண்களின் சுயமரியாதையை பிரதிபலித்தன” என்றார்.

பின்னர் இருவரும் சுமூகமாக பேசி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஜய்க்கு 2ஆவது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த இயக்குனர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.