கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெண் ஊடகவியலாளர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக சீண்டினார் என்று இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த குற்றச்சாட்டு கனடாவில் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம்  18 வருடங்களுக்கு முன்பு 2000ல் இடம்பெற்றது.. அப்போது ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தார்

28 வயது நிரம்பிய ஜஸ்டின் ட்ரூடோ பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கொலம்பியாவில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியில், ஜஸ்டின் ட்ரூடோ அங்கு இருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

அந்த குற்றச்சாட்டை அந்த பெண் ஊடகவியலாளரே பத்திரிக்கைகளில் பிரசுவித்தார். அதேபோல் கனடாவின் முக்கியமான கிறிஸ்டன் வேலி அட்வான்ஸ் என்ற பத்திரிகையிலும் இந்த சம்பவம் குறித்து செய்தி வந்தது. 

பிரதமரின் மகன் என்றால் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் வேறெந்த பத்திரிக்கையிலும் இந்த செய்தி அப்போது வெளியாகவில்லை. 

இந்த நிலையில் தற்போது கனடாவில் மீண்டும் இந்த செய்தி பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தியது. ஆனால் கனடா பிரதமர் அலுவலகம் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதேபோல் ஜஸ்டின் ட்ரூடோவும் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

மிகவும் மோசமான மனநிலையில் அந்த இசை நிகழ்ச்சிக்கு போனதாகவும், பல நாட்கள் கழித்து வெளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது என்றும், அந்த நாளில் அப்படி எந்த பெண்ணிடமும் நான் தவறாக நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

.ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் கூட 50 சதவிகித பெண்களுக்கு இடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.