ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக  185 வீர, வீராங்கனைகள் பங்கேற்பு

Published By: Priyatharshan

05 Jul, 2018 | 10:21 AM
image

(நெவில் அன்தனி)

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலும் பாலெம்பாங்கிலும் இவ் வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 28 விளையாட்டுக்களில் 185 வீர, வீராங்கனைகளை கலந்துகொள்ளச் செய்வதாக தேசிய ஒலிம்பிக் குழு நேற்று அறிவித்தது. 

வீர, வீரராங்கனைகளின் திறைமைகளை வெளிக்கொணர்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையிலேயே இம் முறை அதிகளவிலான வீர, வீராங்கனைகளை அனுப்ப தீர்மானித்துள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

‘‘இலங்கையின் ஒவ்வொரு வீர, வீராங்கனையும் அவரவர் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கவுள்ளோம். கடந்த காலங்களில் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வீர, வீராங்கனைகள் செல்வாக்கை பயன்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிப்பதே எனது நோக்கம். ஒவ்வொரு வீரரும் வீராங்கனையும் அவரவர் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கவுள்ளேன்’’ என்றார் சுரேஷ் சுப்ரமணியம்.

‘‘இம்முறை ஆசிய விளையாட்டு விழாவுக்கு அதிகளவிலான வீர, வீராங்கனைகளை அனுப்பவுள்ளோம். இதற்கு காரணம் 28 வகையான விளையாட்டுக்களில் இலங்கை பங்குபற்றுவதாகும். அணி நிலை விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் பொருட்டும் தனிப்பட்ட வீர, வீராங்கனைகளுக்கு உதவும் பொருட்டும் இவ்வாறு செய்கின்றோம்’’ என சுப்ரமணியம் மேலும் தெரிவித்தார்.

நீச்சல், வில்லாளர், மெய்வல்லுநர், பூப்பந்தாட்டம், பேஸ்போல், கூடைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, துடுப்புப் படகோட்டம், கோல்வ், உடற்கலை சாகசம், ஹாக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, படகோட்டம், பாய்மர படகோட்டம், அணிக்கு எழுவர் றக்பி, ரோலர் ஸ்போர்ட், ஸ்கொஷ், மேசைப்பந்தாட்டம், டய்க்வொண்டோ, டென்னிஸ், ட்ரைஅத்லன், கரப்பந்தாட்டம் (உள்ளக மற்றும் கடற்கரை), பளுதூக்கல், மல்யுத்தம், வூஷு ஆகிய விளையாட்டுக்களில் இலங்கை பங்குபற்றவுள்ளது.

பெண்களுக்கான கபடியில் இலங்கை முதல் தடவையாக பங்குபற்றவுள்ளது.

இப் போட்டிகளில் 138 ஆண்களும் 47 பெண்களும் பங்குபற்றவுள்ளதுடன் 60 அதிகாரிகளும் இந்தோனேஷியா செல்லவுள்ளனர்.

வீர, வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளின் பெயர் பட்டியல்களை விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு செலாளார்நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான விளையாட்டு விழாக்களில் வீர, வீராங்கனைகளை பங்குபற்றச் செய்வதில் சம்மேளனங்கள் அக்கறை செலுத்துமேயானால் தேசிய ஒலிம்பிக் குழு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

தென் கொரியாவின் இன்ச்சொனில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் 80 வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர்.

ஆனால் இலங்கையினால் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமே இரண்டு பதக்கங்களை வெல்ல முடிந்தது. ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிகொண்ட தங்கப் பதக்கத்தையும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் வெண்கலக் பகத்கத்தையும் இலங்கை வென்றது. இம்முறை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறமாட்டாது.

இம்முறை குத்துச் சண்டை, பளுதூக்கல் ஆகிய விளையாட்டுக்களில் இலங்கையினால் பதக்கங்களை வெல்ல முடியம் என்பது தேசிய ஒலிம்பிக் குழுவின் எதிர்பார்ப்பு என மெக்ஸ்வெல் டி சில்வா மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கோல்வ் விளையாட்டில் மிதுன் பெரேரா, அநுர ரோஹன, நீச்சலில் மெத்யூ அபேசிங்க ஆகியோர் இலங்கைக்கு புகழீட்டிக்கொடுக்க முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35