யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று காலை ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி 71 வயதான நபரே சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வீட்டார் வெளியே வந்து போதே இவர் சடலமாக காணப்பட்டுள்ளார். அத்துடன் சடலத்திற்கு அருகில் கயிறு போன்ற பொருட்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவமானது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொரிஸார் அது தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.