இந்தோனேசியாவில் நேற்று முந்தினம் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சுலாவேஸி தீவுப் பகுதியில் 164 பேருடன் பயணித்த படகு நேற்று முந்தினம் விபத்துக்குள்ளானதில். படகில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியன.

இந்நிலையில், படகில் பயணம் செய்தவர்களில் மேலும் 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியாகியது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 

படகில் விபத்து ஏற்பட்டதும் படகை செலுத்திச். சென்றவர் அருகாமையில் இருந்த பாறை மீது லாவகமாக படகை செலுத்தி படகு நீரில் மூழ்காமல் இருக்க முயற்சித்துள்ளார்.

இதனால், படகிலிருந்த நூற்றுக்கணக்கானவர்களில் பலர் பத்திரமாக படகில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர் என இந்தோனேசிய கடல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.