விஜயகலா குறித்து வாய்திறந்தார் கோத்தா

Published By: Vishnu

05 Jul, 2018 | 08:59 AM
image

(எம்.சி.நஜி­முதீன்)

சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட விடு­தலைப் புலிகள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்­பா­டாகும். எனவே அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­வ­ருக்கு எதி­ராக எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கையை அவ­ருக்கு எதி­ராக  மேற்­கொள்ள வேண்டும் என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பு­ரிமை பெறும் வைபவம் நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. குறித்த நிகழ்வின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் மற்­று­மொரு முன்­னோக்­கிய நகர்வை ஆரம்­பித்­துள்ளோம். இக்­கட்­சியின் இன்­றைய அர­சியல் வேலைத்­திட்­டத்தில் நானும் கலந்­து­கொண்டேன். ஆகவே இப்­ப­ய­ணத்தை முன்­னோக்கிச் செல்­ல­வுள்ளோம். மேலும் எமது அர­சியல் முகா­மாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவே அமைந்­துள்­ளது.

அத்­துடன் எதிர்­கா­லத்தில் அமை­ய­வுள்ள எமது அர­சாங்­கத்தில் தேசிய வளங்­களைப் பாது­காப்­பது குறித்தும் நாம் நாடு தழு­விய ரீதியில் புத்­தி­ஜீ­வி­களைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறோம். அவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து நாட்டை உரியவகையில் வழி நடத்­து­வ­தற்கும் எதிர்­பார்த்­துள்ளோம்.

2005, 2010, 2015 ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற தேர்­தல்­க­ளிலும் எனது பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளேன். அதேபோல் எதிர்­கா­லத்­திலும் எனது பங்­க­ளிப்பை வழங்­குவேன். மேலும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் ஒன்­றாக இணைந்து செயற்­படும் குழு­வினர். எனவே எமக்குள் பேதம் இல்லை.

2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள அபேட்­சகர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவே அதனைத் தீர்­மா­னிப்பார். மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பில் போட்­டி­யி­டு­வ­தற்குப் பொருத்­த­மான உறுப்­பி­னர்கள் பலர் உள்­ளனர். அதில் மிகப்­பொ­ருத்­த­மா­ன­வ­ரையே அவர் கள­மி­றக்­குவார்.

மேலும் சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட விடு­தலைப் புலிகள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்பாடாகும். அதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது. எனவே அரசியல மைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதி ராக  மேற்கொள்ள வேண்டும். அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32