விளை­யாட்­டுத்­து­றையில் சாத­னை ­ப­டைத்த வீர வீராங்­க­னை­க­ள் ஜனா­தி­பதி விளை­யாட்டு விரு­துகள் வழங்கி கௌர­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

இவ்­வி­ரு­துகள் குறித்து ஊட­கங்­க­ளுக்கு தெளி­வூட்டும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­கத்தில் நடை­பெற்­றது. இதில் பேசிய அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, இலங்­கைக்கு விளை­யாட்டுத் துறையின் மூலம் பெருமை தேடித் தந்த வீர வீராங்­க­னை­களை கௌரவப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு எமக்கு இருக்­கி­றது. இதைக் கருத்தில் கொண்டே இந்த ஜனா­தி­பதி விளை­யாட்டு விரு­துகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்றன.

இதன் முதற்­கட்­ட­மாக உத்­தி­யோ­கபூர்வ இணையத்­தளம் ஒன்று நாளை ஜனா­தி­பதி தலை­மையில் ஆரம்­பித்து வைக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது என்றார். அதேபோல் சிரேஷ்ட வீர வீராங்கனைகளையும் கௌரவப்படுத்தும் நோக்கில் பல விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.