(எம்.மனோசித்ரா)

அரசியல் பழிவாங்களுக்காக கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற செயற்பாடுகளை நிறுத்துமாரு கோரி கல்வியை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சுக்கு முன்னதாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. நேற்று புதன்கிழமை இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயளாலர் ஜோசப்ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது எமது நாட்டில் அரசியல் பழிவாங்களுக்காக கல்வித் துறைக்கு பொறுத்தமற்ற தகுதியற்றவர்களுக்கு நியமனங்கள் இ முறையற்ற இடமாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெறுகின்றன. 

இவ்வாறான விடயங்களை தடுப்பதற்காக திட்டமிட்ட அடிப்படையில் இன்று ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து கல்விதுறை சார் பணியாளர்களும் சுகயீன விடுமுறையை மேற்கொண்டுள்ளோம். இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் என்பன உள்ளிட்ட 11 சங்கங்கள் இந்த போராட்டத்தில் எம்முடன் இணைந்துகொண்டுள்ளன. 

இப்பிரச்சினை தொடர்பாக சில ஆசிரிய சங்கங்கள் பிரதமர் ரணில்விக்ரமசிங்க மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாவிடமும் பேச்சுவார்ததை நடத்தின. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. எனவே தான் நாம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசியல் பழிவாங்களுக்காக வழங்கப்படும்  பொறுத்தமற்ற நியமனங்கள் காரணமாக பாதிக்கப்படுவது இன்றை மாணவர்களும் எதிர்கால சந்ததியினருமே. எனவே கல்வி அறிவூ மிக்க எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டுமாயின் இவ்வாறான விடயங்களை அரசாங்கம் முற்றாக நீக்க வேண்டும். 

இது குறித்து நாம் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கோரிக்கை விடுக்கின்றௌம். அனைத்து மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வூ வழங்க வேண்டும். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்விதுறையில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டிருக்கின்றார். அதிபர்களையும் ஆசிரியர்களையும் ஏனைய கல்வித் துறை அதிகாரிகளையும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தான் நல்லாட்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி. 

எவ்வாறிருப்பினும் இவ்வாறான தொடர்ச்சியான முறையற்ற செய்றபாடுகளுக்கு இனியூம் நாம் இடமளிக்கப்போவதில்லை. எனவே விரைவில் இதற்கான தீர்வூகள் வழங்கப்படாவிட்டால் இதனை விடவும் பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்றார். 

இதேவேளை நேற்றைய தினம் மலையகத்தின் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்றுள்ளது. எனினும் சில பாடசாலைகளில் மாணவர்கள் வருகை தந்திருந்தும் ஆசிரியர்கள் வருகை தராமையால் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாமையூம் குறிப்பிடத்தக்கதாகும்.