தனக்கு உணவு கொடுத்­துக்­கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை சுறா­வொன்று கட­லுக்குள் இழுத்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் பேர்த் நகரைச் சேர்ந்த மெலிஷா புரூனிங் எனும் 34 வய­தான பெண், மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவின் டுகோங் குடாவில் பட­கொன்றில் உல்­லாசப் பய­ணத்தில் ஈடு­பட்­டி­ருந்தார்.

இதன்­போது, படகின் பின்­பு­ற­மாக நீந்­திக்­கொண்­டி­ருந்த சிறிய சுறாக்கள் சில­வற்­றுக்கு அவர் உண­வை எறிந்­து­கொண்­டி­ருந்தார்.

அப்­போது அவற்றில் ஒரு சுறா மேல் நோக்கிப் பாய்ந்து மெலி­ஷாவின் விரலைக் கௌவி­யது. இதனால் நிலை தடு­மாறி கட­லுக்குள் வீழ்ந்தார் மெலிஷா. 

பின்னர் அரு­கி­லி­ருந்­த­வர்கள் அவரைக் காப்­பாற்­றினர். எனினும், அவரின் விரலில் கடு­மை­யான காயம் ஏற்­பட்­டி­ருந்­தது.

எவ்­வா­றெ­னினும் இதை சுறா நடத்­திய தாக்­கு­த­லாக தான் கரு­த­வில்லை என மெலிஷா புரூனிங் கூறி­யுள்ளார். “எனது முட்டாள் தன­மான செயற்­பாட்­டினால் விளைவை நான் எதிர்­கொண்டேன். சுறாக்­களை அவற்றின் போக்கில் விட்டுவிட வேண்டுமென்ற பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.