(இராஜதுரை ஹஷான்)
விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தலைதோங்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை உடனடியாக பதவி விலக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எவ்வித சலுகைகளும் வழங்காமல் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட அவ்வமைப்பின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸாம்பிக் பின்வருமாறு குறிப்பிட்டார்.
விடுதலை புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்ததாகவும் தற்போது அந்நிலமை மாற்றமடைந்துள்ளது, ஆகவே விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் எழுச்சிப் பெற வேண்டும் என்று பொது நிகழ்வில் பிரதியமைச்சர் விஜயகலா குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்போது நாட்டில் காணப்படும் இன நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் விதமாகவே அசரது கருத்துக்கள் மாத்திரமன்றி வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்களும் காணப்படுகின்றது.
வடகிழக்கில் தற்போதைய காலக்கட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளது அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை என்ற விடயத்திகை கருத்திற் கொண்டு அவர் இப்பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தாலும் இது தேசிய பாதுகாப்பிற்கு முரணானதாகவே காணப்படுகின்றது. பொறுப்புள்ள பதவியினை வகிக்கும் ஒரு அமைச்சர் இவ்வாறு செயற்படுவது விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து புனரவாழ்வு பெற்றுவரும் நபர்களுக்கு இவ்விடயம் போராட்டத்திற்கான உத்வேகத்தினை தோற்றுவிக்கும்.
ஆகவே இவருக்கு வழங்கப்படும் தண்டனை பிறிதொருவருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இவர் தற்போது வகித்து வரும் பிரதியமைச்சர் பதவியினை நீக்கி ஒழுக்காற்று சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் அரசாங்கம் இவ்விடயத்தில் ஒரு போதும் ஒருதலைபட்சமாக செயற்பட கூடாது ஏனைய விடயங்களில் அதாவது கடந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை போன்று துரிதமாக செயற்பட வேண்டும்.
மேலும் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீன துறைமுக நிறுவனத்திற்கு சூழ்ச்சிகளுடன் விற்றதை போன்று தற்போது மத்தளை விமான நிலையத்தினையும் இந்தியாவிற்கு விற்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த கிழமைகளில் இந்திய தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே அரசாங்கம் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு வெகுவிரைவில் பிரதிபலனை பெறும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM