ரூபா 800 மில்லியனை வழங்க சிறிலங்கன் எயர்லைன்ஸ் இணக்கம் - பெற்றோலிய கூட்டத்தாபனம்

Published By: Priyatharshan

04 Jul, 2018 | 04:48 PM
image

சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியன் ரூபா பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா எயார்லைன்ஸ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மிகப்பெரிய நிதியை நிலுவையாக செலுத்த வேண்டியிருந்தது. 

இந்நிதியை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எயர்லைன்ஸ் நிறுவனத்துடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. 

இந்நிலையில் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அரச தொழில் முயற்ச்சி அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் ஹேவாவிதாரன, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க மற்றும் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ராஜித பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 13.45 பில்லியன் கடன் நிலுவையில் முதற்கட்டமாக ரூபா 800 மில்லியனை வழங்க தீர்மானித்துள்ளது. மீகுதிப் பணத் தொகையை செலுத்துவதற்கு, அமைச்சரவையின் அனுமதியைபெற்று தனியார் வங்கியில் கடன்பெறமுயற்சிக்கவுள்ளது. 

இதையடுத்து தொடர்ந்து சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45