அலுவலகத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதுகு வலி ஏற்படும். இது ஏன் உருவாகிறது? இதற்கான நிவாரணம் என்ன? இந்த வலியை வருமுன் தடுக்க இயலுமா? என கேட்டால் முடியும் என்கிறார்கள் வைத்தியர்கள்

தகவல் தொழில் துறையாகட்டும் அல்லது அரசு மற்றும் தனியார் துறையாகட்டும் அங்கு பணியாற்றும் ஆண்களும், பெண்களும் குறைந்த பட்சம் மூன்று மணித்தியாலத்திற்காவது அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் இப்படி ஒரேயிடத்தில் அசையாமல் வேலை செய்யும் போது, முதுகில் உள்ள தசைகள் தங்களின் இயல்பான இயக்கத்திற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் முதுகு பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்து இறுக்கமற்றதாக மாறிவிடுகிறது. இதனால் முதுகு தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்படத் தொடங்குகிறது.

ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து முதுகு தண்டு தன்னுடைய இயல்பான அமைப்பிலிருந்து விலகி, வளையத் தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக நரம்புகள் சேதமடைந்து மூட்டு வலி, முதுகு வலி, தொடைப்பகுதி வலி, கால் கெண்டைச் சதை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்துடன் இதன் காரணமாகவே சிறுநீர் பைக்கு செல்லவேண்டிய சிறுநீரக செயல்பாட்டிலும் மாற்றம் உண்டாகிறது. இதனால் சிறுநீரகக் கல் கூட உருவாகும் வாய்ப்பிருக்கிறது. பெண்களுக்கு இதன் காரணமாக இயல்பான அளவில் சுரக்கும் எண்டார்கார்பின் என்ற ஹோர்மோன் சுரப்பியின் சுரப்பிலும் மாற்றம் உருவாகி, கருப்பைத் தொடர்பான சிக்கல்களை தோற்றுவிக்கிறது.

இதற்கு என்ன செய்யலாம்? என்றால் ஒரு நாளைக்கு இரண்டு லீற்றர் அளவிற்கு சிறுநீர் கழிக்கவேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தண்ணீர், பழச்சாறு, தேநீர், கோப்பி ஆகிய பானங்களை அருந்தலாம். அத்துடன் காலையில் எழுந்தவுடன் ஸ்கிப்பிங் எனப்படும் ஒரேயிடத்தில் குதிக்கும் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

இதன் மூலம் வயிற்றில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். வலது மற்றும் இடது மணிக்கட்டை ஒரே சமயத்திலோ அல்லது இரண்டு வெவ்வேறு தருணங்களிலோ ஒன்பது முறை வலது இடதாக சுற்றவேண்டும். இதனால் எம்முடைய உடலில் சுரக்கும் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாட்டை சமநிலைப்படுத்தலாம்.

இதற்கு பின்னரும் முதுகு வலி நீடித்தால் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்று, அவர்களின் வழிகாட்டலின் படி இயன்முறை மருத்துவ பயிற்சியை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியர் ராஜ்கண்ணா.