(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350 ஆம் பிரிவு உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய சுவடுகள் மற்றும் காப்பகத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மத்தியின் பிணைமுறி கொடுக்கல் வாங்களின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதியின் விசாரணை அறிக்கையானது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் தொடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாகவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தகவலறியும் சட்டத்தினை பயன்படுத்தி இது சம்பந்தமான தகவல்களை  பெற்றுக் கொள்ள  இலங்கை பிரஜைகள் விண்ணப்பங்களை  விண்ணப்பிக்கலாம். அல்லது  தேசிய சுவடுகள் மற்றும் காப்பகத்திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை கையளித்து குறுகிய காலத்திற்குள்  தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.