நீர்கொழும்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரது தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவமானது நேற்று செவ்வய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு பிரதேச பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆவார்.

பாடசாலை முடிந்தது வீடு திரும்பும்போதே மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பெண்ணின் தாலிக்கொடியை அபகரித்து சென்றுள்ளனர்.

இவ்வாறு இவரிடமிருந்து அபகரிக்கப்பட்ட தாலிக்கொடியானது சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியானவை என்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.