சவச்­சா­லையில்   சட­லங்­களை கெடாது வைப்­ப­தற்கு பயன்­படும் குளிர்­சா­தன உப­க­ர­ணத்தில் பெண்­ணொ­ருவர் உயி­ருடன்  இருப்­பது கண்­ட­றி­யப்­பட்ட  அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

தெருவில் சென்ற போது விபத்­துக்­குள்­ளான குறிப்­பிட்ட பெண்ணை பரி­சோ­தித்த மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்கள்  அவர் இறந்து விட்­ட­தாக  அறி­விப்புச் செய்­த­தை­ய­டுத்து அவர் குவாங்டெங் மாகா­ணத்­தி­லுள்ள கோதேங் சவச்­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்டார்.

இந்­நி­லையில் சவச்­சாலைப் பணி­யாளர் ஒருவர் குளிர்­சா­தன உப­க­ர­ணத்தில் வைக்­கப்­பட்ட  உடலை பரி­சோ­திக்க  வந்த போது அந்தப் பெண்­ சுவாசிப்­பதை அவ­தா­னித்து அதிர்ச்­சி­ய­டைந்தார். இத­னை­ய­டுத்து அந்தப் பெண் தற்­போது ஜொஹன்­னஸ்பேர்க் நக­ரி­லுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.