அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடக்கப் போகும் சவுதி அரேபியா!!!

Published By: Digital Desk 7

04 Jul, 2018 | 11:20 AM
image

அமெரிக்காவின் கோரிக்கையை அடுத்து சந்தையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இவ்வாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.

இதனை கட்டுக்குள் கொண்டு வர சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ட்ரம்ப் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சவுதி அரேபியா நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

இந்த தகவலை ட்ரம்ப் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா சர்வதேச அளவில் தேவையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என அறிவித்துள்ளது.

கூடுதல் உற்பத்தி திறனை பயன்படுத்த தயராகி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி இரண்டு மில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47