மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு அடர்ந்த காட்டுப் பகுதியில் மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்று அதிகாலை நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

கசிப்பு தயாரிக்கும் நிலையத்தை முற்றுகையிட்ட அதிகாரிகள் ஒருவரை கைது செய்ததுடன் பெருமளவிலான கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக மட்டககளப்பு மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் எதிர்வரும் 2ம் திகதி வாழைச்சேனை நீதிமன்றததில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

- ஜவ்பர்கான்