இலங்கையில் மிகவும் வெற்றிகரமான மற்றும் தொன்மை வாய்ந்த பெரு நிறுவனமான JAT Holdings ஆனது CROWN Paints UK உடன் இணைந்து, உள்ளுர் சந்தைக்கு பொருத்தமான வகையில் சர்வதேச தரங்களுடன் வண்ணப்பூச்சுக்களை உள்ளுரில் உற்பத்தி செய்கின்றது.

இந்த பிராண்டானது 200 வருட நம்பிக்கை மற்றும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளதுடன் கனம் பொருந்திய மகாராணியினால் ரோயல் உத்தலவாதம் பெற்ற ஒரேயொரு பிராண்டாகவும் காணப்படுகின்றது.

UK யில் பாரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான வண்ணப்பூச்சு தயாரிப்பாளராக Crown Paints காணப்படுவதுடன் தனது உலகளாவிய ரீதியாக தனது முன்னிலையை விரிவுபடுத்துகின்றது.

“பூச்சுக்களை மாத்திரம் பூச வேண்டாம் மாறாக கிரிடமளியுங்கள்” எனும் இந்த பிராண்டானது சந்தையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளதுடன் பல வகையிலான அனுகூலங்களை பயன்படுத்துனர்களிற்கு கொண்டு வருகின்றது.

இன்டரியர் இமல்ஷன்,  எக்ஸ்டிரியர் இமல்ஷன், வாட்டர் பில்லர், ஸ்கிம் கோட் மற்றும் ஜொயின்ட் கம்பவுன்ட் எனும் 5 வகையிலான வகைகளில் பெற இயலுமாக காணப்படும் CROWN Paints, உங்களுடைய சுவர்களிற்கு தேவையான மிகப்பொருத்தமான வண்ணப்பூச்சுக்களை தேர்ந்தெடுப்பதில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. .

“இதன் அனைத்து சுற்று செயல்திறனின் மூலமாக ஒரு குறுகிய காலத்தினுள் விரைவாக சந்தை பங்குகளை CROWN Paints பெற்றுள்ளதுடன், அறிமுகப்படுத்தப்பட்ட சகல தயாரிப்புக்களிலும் ஒரு வளர்ச்சியை நாங்கள் காண்கின்றோம். கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட “Best of Whites”பிரச்சாரமானது மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன் வாடிக்கையாளர்கள் மேலும் தனித்துவமான மற்றும் சுவாரசியமான அறிமுகங்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்க இயலும்.” என்று 351, பன்னிபிட்டிய வீதி, தலவத்துகொடயில் அமைந்துள்ள JAT Holdings பிராண்ட் முகாமையாளர் சக்போ கோஹோனா குறிப்பிட்டார்.

வீட்டு உரிமையாளரினது ரசனைக்கு பொருந்தும் வகையிலும் உங்களுடைய வீட்டு உட்புற சுவர்களிற்கு ஒரு தனித்துவமான இறுதி பூச்சைக் கொடுக்கும் வகையிலும் CROWN Silk Emulsion வகையானது விடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த “Extreme-Xposure” ஆனது இலங்கையின் மாறி வரும் காலநிலைக்கு ஏற்புடையதாக காணப்படும் அதேநேரத்தில் நீடித்து நிலைக்கத்தக்க உத்தரவாதத்தையும் கொண்டுள்ளது.

இந்த தயாரிப்புக்களை சகலரிற்கும் கிடைக்கப்பண்ணும் வண்ணமாக பிரத்யேக CROWN மையங்களை JAT நாடு முழுவதிலும் தொடங்கியுள்ளதுடன் உயர் வாடிக்கையாளர் நிலையங்களிலும் கிடைக்கப்பெற இயலுமாகவுள்ளது. சகல வாடிக்கையாளர்களும் உண்மையான மற்றும் உலக தரம் வாய்ந்த தயாரிப்பை பெற்றுக்கொள்ளவும் இலகுவாக எங்கு கொள்வனவு செய்யலாம் என அறிந்து கொள்வதை உறுதி செய்யும் வகையிலும் சகல மையங்களும் கவர்ச்சிகரமான CROWN விநியோக பலகைகளை கொண்டுள்ளன. மேலதிக வாடிக்கையாளர் அனுபவங்களைப் பெற தயவு செய்து  www.crownit.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.

இந்த CROWN வர்ணப்பூச்சுக்களானவை இவற்றினது மென்மையான பூச்சு, இலகுவான பயன்பாடு, தனித்துவமான பிரகாசம், மனித மற்றும் இயற்கை நேய கூறுகள் மற்றும் உற்பத்தி செயன்முறையின் போது பயன்படுத்தப்படுகின்ற 99% “Breatheasy” தொழில்நுட்பம் போன்றவற்றின் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் உயர் கோரிக்கையை கொண்டுள்ளது. லீட்டரிற்கான கவர்ச்சிகரமான விலையை கொண்டுள்ள  CROWN Paints, வீட்டு உரிமையாளர்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இறுதிப்பூச்சை வழங்கும்; இமல்ஷன் வர்ணப்பூச்சாகும்.