அபுதாபியில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் உம் அல் எமராத் பூங்காவில் 4 ஆவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி தலைமை தாங்கினார்.
இதில் உரையாற்றிய அபுதாபிக்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி,
யோகா நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமீரக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
அமீரக சகிப்புத்தன்மைக்கான மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
யோகா பல்வேறு புதிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது. மேலும் வேறுபாடுகளைக் களைய முக்கிய பங்காற்றி வருகிறது. தனது அமைச்சரகம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடப்பதற்கு ஆதரவு அளிக்கும் என்றார்.
இந்திய அமீரக உறவுகளை வெளிப்படுத்தும் வகையில் அரபி இசையுடன் கூடிய யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன் இந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM