(எம்.டி.லூசியஸ், எஸ்.ஞானபிரபு)

தக­வல்­களை பரி­மாறும் எப்­ஸாக 2010 ஆம் ஆண்டு வெளியான வைபர் தற்­ச­மயம் பிர­ப­ல­மான தகவல் பரி­மாறும் எப்­ஸாக உரு­வெ­டுத்­துள்­ளது. ஏனைய மெசேஜிங் எப்­ளி­கே­ஷன்­களை விட அதி­க­மாக ஸ்டிக்கர் மற்றும் (எமோட்­டிகான்) உணர்ச்சி சித்­தி­ரங்­களை கொண்­டுள்­ளது. தற்­போது உலக நாடு­களில் சுமார் 600 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மாக பயன்­ப­டுத்­தப்­படும் வைபரின் தற்­போ­தைய நில­வரம் தொடர்பில் தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான பிராந்­திய தலைமை அதி­காரி அனுபவ் நாயர் கேச­ரிக்கு விசேட செவ்­வி­யொன்றை வழங்­கினார்.

தெற்­கா­சிய நாடு­க­ளுடன் ஒப்­பிடும் போது இலங்­கையில் தற்­போது வைபர் பாவ­னை­யா­னது சடு­தி­யாக அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் உள்ள இளந் தலை­மு­றை­யினர் வைபரை வெறும் குறுந்­த­க­வல்கள் அனுப்ப மாத்­திரம் பயன்­ப­டுத்­தாமல் வைபரில் உள்ள அனைத்து வச­தி­க­ளையும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இலங்­கையின் இளம் தலை­மு­றை­யினர் புதிய தொழி­ல்நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வதில் மும்­மு­ர­மாக இருக்­கின்­றனர் என அனுபவ் நாயர் தெரி­வித்தார்.

வைபரின் தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரி அனுபவ் நாயரின் முழுமையான செவ்விவருமாறு


கேள்வி : - உல­க­ளவில் இன்று தொழில்­நுட்ப வளர்ச்­சிகள் வியா­பித்து காணப்­படும் இத்­த­ரு­ணத்தில் தற்­போது உல­க­நா­டு­களில் வைபர் பாவ­னை­யா­ளர்கள் குறித்­தான தர­வு­களை பற்றி குறிப்­பிட முடி­யுமா?

பதில்: - உல­க­நா­டு­களில் இன்று 664 மில்­லியன் மக்கள் வைபரை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இத­ன­டிப்­ப­டையில் உலக நாடு­க­ளுடன் ஒப்­பிடும் போது இலங்­கையில் வைபர் பாவ­னை­யா­ளர்­களின் தொகை­யா­னது அதி­க­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் தற்­போது இலங்­கையின் மொத்த சன­த்தொ­கையில் 20 வீத­மானோர் வைபரை பயன்­ப­டுத்­து­வ­தோடு பெரும்­பா­லானோர் வைபர் ஸ்டிக்­கரை பயன்­ப­டுத்­து­கின்­றனர். மேலும் தற்­போது கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் படி உல­க­ளவில் 50 வீத­மானோர் வைபரை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

கேள்வி : - தற்­போது உல­க­நா­டு­க­ளி­டையே வைபர் எவ்­வா­றான வகையில் பர­வ­லாக்­கப்­படும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது?

பதில்: வைபர் மென்­பொ­ரு­ளா­னது உலக நாடு­களில் தொழி­ல்நுட்ப வளர்ச்­சி­யுடன் பய­ணிக்கும் பாவ­னை­யா­ளர்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்­த­வ­கையில் தெற்­கா­சி­யாவில் இந்­தியா,தென்­கி­ழக்கு நாடு­களில் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஐக்­கிய அமெ­ரிக்கா, ஐக்­கிய ராஜியம், ஜப்பான் ஆகிய நாடு­களில் எங்­க­ளது நிறு­வ­னத்தின் கிளை­க­ளா­னது பரந்­த­ளவில் காணப்­ப­டு­கின்­றது. தற்­கா­லத்தில் வைபர் பாவ­னையின் அதி­க­ரித்த வளர்ச்சி கார­ண­மாக நாடு­க­ளுக்­கி­டையே வர்த்­தக வாய்ப்­புக்கள் மக்­க­ளி­டையே அதி­க­ரித்த போக்கை எடுத்து காட்­டு­கின்­றது. மறு­புறம் உல­க­நா­டு­க­ளி­டையே தொடர்­பாடல் வச­தி­களின் துரித வளர்ச்­சிக்கு முக்­கிய ஊட­க­மா­கவும் வைபர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. தெற்­கா­சிய நாடு­களில் தற்­போது வைபர் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்­கை­யா­னது வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது.

கேள்வி : உங்­க­ளது சேவை துறையில் நீங்கள் கண்ட சவால்கள் தொடர்­பி­லான அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்ள முடி­யுமா?

பதில்: - எங்­க­ளது துறை­யினை பொறுத்­த­வரை எம்மால் முன்­னெ­டுக்­கப்­படும் நவீன செயற்­றிட்­டங்கள் மூலம் பெறப்­படும் பலமே எமக்கு பெரிய சவா­லாகும். மறு­புறம் உல­க­ம­ய­மாக்­கப்­பட்ட எமது மென்­பொ­ருளை சந்­தைப்­ப­டுத்தும் நாம் எமது துறை­சார்ந்த விட­யங்கள் தொடர்பில் பாரிய சவால்­களை எதிர்­நோக்­கு­கின்றோம். உல­க­நா­டு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது ஒவ்­வொரு நாட்டின் தொழி­ல்நுட்ப மற்றும் மென்­பொருள் பாவ­னை­யா­ளர்கள் பல்­வேறு வகையில் வேறு­பாட்­டி­னையும் தேவை­யி­னையும் கொண்டு காணப்­ப­டு­கின்­றனர். அந்­த­வ­கையில் அனைத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளையும் திருப்திப்­ப­டுத்­து­வ­தா­னது எமது துறைக்கு பாரி­ய­ளவு சவா­லாக அமை­கின்­றது. இருந்த போதிலும் உல­க­நா­டு­களில் உள்ள எமது அனைத்து பாவ­னை­யா­ளர்­க­ளையும் முடிந்­த­வரை திருப்தி கொள்ள அனைத்து செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.

கேள்வி : - வைபர் துறை சார்ந்த உங்­க­ளது செயற்­பா­டு­களில் தடங்கள் அல்­லது பின்­ன­டை­வு­களை எதிர்­நோக்­கி­ய­துண்டா?

பதில்: நான் வைபர் சேவை துறையில் தெற்­கா­சி­யாவின் பிர­தான அதி­கா­ரி­யாக கடந்த 3 வரு­டங்­க­ளாக பணிபு­ரி­கிறேன். அந்­த­வ­கையில் எனது சேவைக்­கா­லத்தில் வைபர் பயன்­பாட்டில் சடு­தி­யான மாற்­றங்கள் அல்­லது பின்­ன­டை­வு­களை எதிர்­நோக்­கிய அனு­ப­வங்கள் இல்லை. எமது வைபர் பாவ­னை­யா­ளர்­களின் தேவை­களை இனங்­கண்டு அதற்கு தேவை­யான மாற்­றங்­களை உள்­வாங்க பாவ­னை­யா­ளர்­களின் யோச­னைகள், கருத்­து­களை பெற்­று­வ­ரு­கின்றோம். இதன் மூலம் வைபர் மென்­பொ­ருளில் தேவை­யான மாற்­றங்­களை உள்­வாங்க இது எமக்கு உத­வி­யா­க­யி­ருக்கும். இதனை கருத்தில் கொண்டே உலக நாடு­களில் உள்ள முகவர் நிலை­யங்­க­ளூடாக 24 மணித்­தி­யால சேவையை நாம் வழங்­கு­வ­தோடு இதன் மூலம் எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து உட­ன­டி­யான மாற்­றங்­களை அல்­லது குறை­பா­டு­களை இனங்­கா­ணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

கேள்வி : - இத்­து­றையில் உள்ள ஏனைய மென்­பொ­ருள்­களின் போட்­டித்­தன்மை தற்­போது உலக சந்­தையில் எவ்­வாறு வியா­பித்­துள்­ளது என்­ப­தனை விவ­ரிக்க முடி­யுமா?

பதில்:- இலங்­கையில் உள்ள app annie என்ற இணை­யத்­த­ளத்தில் கைய­டக்க தொலை­பே­சியில் மென்­பொ­ருள்­களை பயன்­ப­டுத்­தப்­படும் வாடிக்­கை­யா­ளர்­களின் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டையில் மென்­பொ­ருள்கள் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­படும். இதில் வைபர் இலங்­கையில் முன்­னி­லையில் உள்­ளது. ஏனைய மென்­பொ­ருள்­க­ளுடன் ஒப்­பிடும் போது நாம் தர­மான நிலை­யி­லேயே உள்ளோம். நாம் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்றோம் என்­பது வைபர் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்­கை­யி­லி­ருந்து புலப்­ப­டு­கின்­றது.

நாங்கள் எவ்­வாறு வளர்ச்­சி­ய­டைந்து இலங்கை மக்­க­ளி­டையே நாங்கள் எவ்­வாறு அவர்­களின் விருப்­பங்­களை நிவர்த்தி செய்து அவர்­க­ளி­டையே தொடர்ந்து செல்­லு­வதே எங்கள் போட்டி. ஒரு வைபர் பாவ­னை­யாளர் வைபரை விட்டு அக­லாமல் தொடர்ந்து அதை பயன்­ப­டுத்த வைப்­பதே எங்கள் நோக்கம் அதுவே எங்கள் போட்டி. எனவே ஏனைய இல­வச மென்­பொ­ருள்­க­ளுடன் போட்­டித்­தன்மை காணப்­பட்­டாலும் எமது தனித்­து­வத்தை நிலை­நாட்­டி­கொண்டே இருக்­கின்றோம். எனவே இல­கு­வாக போட்­டி­யிடக் கூடிய நிலையில் நாம் எமது செயற்­பா­டு­களை சிறந்த முறையில் முன்­னெ­டுக்­கின்றோம்.

கேள்வி : - public chat தொடர்பில் தெளிவுப்­ப­டுத்த முடி­யுமா?

பதில்: கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு வைபர் மென்­பொ­ருளின் கீழ் (public chat) என்ற புதிய வச­தியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம். இதன் மூலம் உல­க­நா­டு­க­ளி­டையே பிர­சித்­திப்­பெற்ற நபர்கள் தங்கள் ரசி­கர்­க­ளி­ட­மி­ருந்து கருத்­து­களை பகிர்ந்து கொள்­வ­தற்­கான இதனை பயன்­ப­டுத்த கூடிய வச­தி­யினை இது பெற்று கொடுக்­கின்­றது. குறிப்­பாக புகழ்­பெற்ற நபர்­களின் வாழ்­கையில் மறை­மு­க­மான விட­யங்கள் குறிப்­பாக அவர்­களின் உண்­மை­யான வாழ்க்கை வட்­டத்தை பிர­தி­ப­லிப்­ப­தாக இந்த (public chat) காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கை­யினை பொறுத்­த­வரை இராஜ், பாதிய மற்றும் சந்தோஷ் போன்ற பிர­பல பாட­கர்கள் மற்றும் யுரேனி ரோஷிக போன்ற நடி­கைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இதனை பயன்­ப­டுத்­து­கின்­றனர். அதா­வது பிர­ப­லங்கள் தமது எண்­ணங்­களை இதன் பகிர்ந்து கொள்­கின்­றனர். உதா­ர­ண­மாக பாதியா சந்தோஷ் அண்­மையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்­டி­ருந்­தனர். இந்த வீடி­யோவை பதிவு செய்ய முன்னர் படப்­பி­டிப்­புக்­களின் போது எடுக்­கப்­பட்ட படங்­களை public chat இல் பதிவு செய்­தி­ருந்தார். இது அனை­வ­ராலும் லைக் செய்­யப்­பட்­டது. இவ்­வாறு மறை­மு­க­மான அனு­ப­வங்களை ரசி­கர்­க­ளி­டையே பிர­ப­லங்கள் பகிர்ந்­து­கொள்ள public chat உத­வி­யாக உள்­ளது.

கேள்வி : - இலங்­கையில் எதிர்­வரும் காலங்­களில் நீங்கள் அடைய திட்­ட­மிட்­டுள்ள இலக்­குகள் தொடர்பில் குறிப்­பி­டுங்கள்?

பதில்: - இலங்­கையில் முக்­கி­ய­மான மூன்று பிர­தே­சங்­களை தற்­போது இனங்­கண்­டுள்ளோம். அந்­த­வ­கையில் குறிப்­பிட்ட இந்த பிர­தே­சங்­களில் வைபரை பயன்­ப­டுத்தும் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்­கான சில செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க பாரிய அள­வி­லான மூத­லீடு திட்­டங்­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

கேள்வி : வைபரில் புதிய முயற்­சி­யாக உள்ள பணம் பரி­மாற்றல் சேவை தொடர்பில்?

பதில்: - வைபரின் தற்­போ­தைய பரி­ணாம வளர்ச்­சியில் ஒன்­றாக பணப் பரி­மாற்றல் சேவை உள்­ளது. தற்­போது ஐக்­கிய அமெ­ரிக்­காவில் மாத்­திரம் செயற்­பாட்டில் இச்­சேவை உள்­ளது. மக்கள் வைபரில் பேசு­வ­துக்கு மாத்திரம் அல்­லாது தங்­களின் எண்­ணங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்கும் உப­யோ­கிக்­கின்­றனர். இன்று காணப்­படும் வேலைப்­ப­ழுவின் கீழ் மக்­க­ளுக்கு சில சம­யங்கள் பணப்­ப­ரி­மாற்றல் தேவைகள் திடீ­ரென ஏற்­ப­டு­கின்­றது. மறு­புறம் அவ­ச­ர­மாக தங்­களின் நண்­பர்கள், உற­வி­னர்கள் இடையே பணப்­ப­ரி­மாற்ற தேவைகள் பூர்த்தி செய்­து­கொள்ள வைபரை பயன்­ப­டுத்தி கொள்­ளவும் வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. அமெரிக்­காவில் மட்டும் காணப்­படும் பணம் பரி­மாற்றல் சேவை அனைத்து நாடு­க­ளிலும் விஸ்­த­ரிப்­ப­தற்­கான முயற்­சி­களும் முன்­னெ­டுக்கப்ப­டு­கின்­றது.

கேள்வி : - வைபர் வலை­ய­மைப்பு முகவர் நிலைய­மொன்றை இலங்­கையில் அமைக்க திட்­ட­மிட்­டுள்­ளீர்­களா?

பதில்: இல்லை, நாங்கள் தனி ஒரு நப­ரிடம் தங்கி நிற்­காமல் வெவ்­வேறு தனியார் துறை கம்­ப­னி­க­ளுடன் இணைந்து எங்­க­ளி­னது உற்­பத்­தி­களை மக்­க­ளி­டையே கொண்டு செல்ல முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். வளர்­சி­ய­டைந்து வரும் தொழில்­நுட்­பத்தில் நாங்கள் மக்­களின் தேவை­களை இனங்­கண்டு மக்­களின் தேவை­களை அறிந்து அவர்­க­ளுக்கு ஏற்­ற­வாறு எங்­களின் சேவை­யினை கொண்டு செல்­வதே எங்­களின் இலக்கு.

கேள்வி : வைபரை பயன்­ப­டுத்தி எவ்­வாறு ஒரு நிறு­வனம் தமது விளம்­ப­ரங்­களை சந்­தை­ப­டுத்த முடியும் என ஆலோ­சனை கூற முடி­யுமா?

பதில்: - இவை தொடர்­பாக குறிப்­பிட வேண்­டு­மாயின் அதற்கு பல்­வேறு ரீதி­யி­லான உதா­ர­ணங்­களை குறிப்­பி­ட­மு­டியும் அந்­த­வ­கையில் இவற்றில் ஒன்று (public chat) அதன் மூலம் தங்கள் பாவ­னை­யா­ளர்­க­ளிடம் தங்கள் புதிய உற்­பத்தி, புதிய வச­திகள் மற்றும் தங்­களின் உற்­பத்­தியை அறி­முகம் செய்­வ­தற்­கான அனைத்து வாய்ப்­பு­களும் காணப்­ப­டு­கின்­றன. மறு­புரம் பாவ­னை­யா­ளர்கள் தங்­களின் நிகழ்­சிகள் மற்றும் விருப்­ப­மான வடிவில் நகைச்­சுவை மற்றும் பொழு­து­போக்­குக்­காக உரு­வாக்கும் sticker viber மூல­மாக அதனை தர­வேற்றி அந்­த­வ­கை­யிலும் இலா­பத்தை பெற்று கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்றது.

கேள்வி : - எதிர்­வரும் காலங்­களில் வைபர் வலையமைப்பில் உள்­வாங்க திட்­ட­மிட்­டுள்ள புதிய சேவைகள் தொடர்பில்?

பதில்: - எமது வலையமைப்பின் கீழ் எதிர்­வரும் காலங்­களில் மக்­க­ளுக்கு தேவை­யான பல்­வேறு வச­தி­களை அறி­முகம் செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம். அதில் பணப்­ப­ரி­மாற்ற சேவை­யினை விஸ்­த­ரித்தல் உள்­ளிட்ட சில விட­யங்­களில் மாற்­றங்­களை உள்­வாங்கி அதனை விரைவில் செயற்­ப­டுத்­து­வ­தோடு மக்­களின் தேவைக்கு ஏற்­ற­வ­றான சேவைகள் மூல­மாக தொடர்­சி­யாக மக்­களை திருப்திப்­ப­டுத்­துவோம்.

கேள்வி : - இறு­தி­யாக இலங்கை வாழ் வைபர் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு நீங்கள் குறிப்­பிட விரும்­பு­வது?

பதில்: உலக சந்­தை­க­ளுடன் ஒப்­பிடும் போது இலங்­கையில் மிக விரை­வாக வைபர் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கின்­றது. எம்­மீது நம்­பிக்­கை­யினை கொண்டு எமது வலையமைப்­பினை பயன்­ப­டுத்தும் எங்­க­ளது அனைத்து பாவ­னை­யா­ளர்­க­ளுக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்தின் சார்பில் நன்­றி­யினை தெரிவித்து கொள்­கின்றோம். இலங்­கையின் இளந் தலை­மு­றை­யினர் வைபரை வெறும் குறுந்­த­க­வல்கள் அனுப்ப மாத்திரம் பயன்­ப­டுத்­தாது அதில் உள்ள அனைத்து வச­தி­க­ளையும் பயன்­ப­டுத்தி வருகின்றனர். இலங்கையின் தற்போதைய இளைய சமூதாயத்தினர் நவீன தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவது சிறந்த விடயம்.