விசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக  இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் விசாரணைகள் நிறைவடையும் வரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை குறித்த அமைச்சு பதவியில் இருந்து இடைநீக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.