ஹர்பஜன் சிங்கின் விளையாட்டை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்த நிலையில், தற்போது அவருக்கு சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள பிறந்த நாள் வாழ்த்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைத்தார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கினர்.

ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்தது. தனது தமிழ் ரசிகர் ஒருவரின் மூலமே அவர் தமிழில் ட்வீட் செய்து வந்தாலும், அவரது இந்த செயல் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹர்பஜன் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்’ என சச்சின் ட்வீட் செய்துள்ளார். சச்சின் தெரிவித்த பிறந்தநாளை விட அவர் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது இன்றைய இணையத்தை வைரலாக்கியுள்ளது.