அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தின் மாணவி செல்வி தர்ஷிகா தனேஸ்வரன்  வெண்கலப்பதக்கம் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தைக்வொண்டோ போட்டிகளில் வடமாகாணம் பெறும் ஒரேயொரு பதக்கம் இதுவாகும்.

கல்வி அமைச்சினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் ஒவ்வோர் ஆண்டும் விளையாட்டுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டில், இவ்விளையாட்டுப்போட்டித்தொடரின் முதலாவது கட்டமானது திருகோணமலையில் உள்ள மக்கேஷர் விளையாட்டு அரங்கில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளில் இருபது வயதுக்குட்பட்ட 57-62 கிலோ நிறைப்பிரிவில் பங்குபற்றிய மாணவி செல்வி த.தர்ஷிகா வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தைக்வொண்டோ போட்டியில் வடமாகாணம் பெறும் ஒரேயொரு பதக்கம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி செல்வி த.தர்ஷிகாயும் பயிற்றுவிப்பாளர் திரு. சி. ஜனா அவர்களையும் பாடசாலைச்சமூகம் வாழ்த்துகிறது.