கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகிகொண்டிருக்கும் என்.ஜி.கே படத்தின் டீஸர் இம்மாதம் 23 ஆம் திகதி சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சூர்யா  இயக்குநர் கே.வி ஆனந்துடன் அயன். மாற்றான் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மோகன்லால், சமுத்திரகனி, பொலிவுட் நடிகர் பொமன் இரானி,தெலுங்கு நடிகர் அல்லு சிரீஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சயீஷா நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் முன்னணி நடிகரான ஆர்யாவும் இணைந்திருக்கிறார். இது குறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது,

"ஆம் நடிகர் ஆர்யா எங்களுடன் இணைந்திருக்கிறார். ஆனால் அவர் வில்லனா? அல்லது முக்கியமான கேரக்டரா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது." என்றனர்.

ஆனால் வில்லனாக தான் நடிக்கிறார் என்றும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கவண் படத்தில் டி. ராஜேந்தர் நடித்தது போல் முக்கியமான கேரக்டர் என்றும் சொல்கிறார்கள்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.