"ஜெயலலிதா இருந்திருந்தால் அனுமதித்திருக்கமாட்டார்"

Published By: Digital Desk 7

03 Jul, 2018 | 04:40 PM
image

"ஜெயலலிதா தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் ஆளுநரின் ஆய்வை அனுமதித்திருக்கமாட்டார்" என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனியரசு கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

"தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் அவசியம் தேவை. சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கக்கூடிய விவசாயிகளின் நிலம், மற்றும் வீடுகளுக்கு சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.

பாதிக்கப்படும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாற்று இடம் போன்றவற்றினை உறுதி செய்த பின்னர் நிலத்தை அளந்து எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தை அளப்பது, எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மக்களுடன் இணைந்து கொங்கு இளைஞர் பேரவை போராடும்.

அந்த வகையில் சாலையே வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் நிராகரிக்ககூடாது. மத்தியில் ஆளும் மோடி அரசு தங்களின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து கொண்டு உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

மாநில சுயாட்சியை காக்கும் வகையில் தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வரவேற்கிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவே இதற்கு காரணமாகிவிட்டது. ஆளுநர் ஆய்வினை எதிர்க்க முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு உள்ளூர எண்ணம் உள்ளது.

சட்டசபையில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் இதில் ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரை ஆய்வு செய்ய அனுமதித்து இருக்க மாட்டார்." என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:02:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35