இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என கருத்துவெளியிடுவதற்கு காரணம் என்னவென ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினை கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு தற்போதைய அரசாங்கம் பெரும்சேவையாற்றியுள்ளது நல்லிணக்கத்தை  ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தையிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி மக்களிற்கு அரசாங்கம் செய்த சேவைகள் குறித்து தெரிந்திருந்தால் இராஜாங்க அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் முன்னாள் போராளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளது இதன் காரணமாக பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அரசியல் இலாபம் பெறுவதற்காக இவ்வாறான கருத்தை வெளியிட்டாரா அல்லது நியுயோர்க் டைம்ஸ் செய்தி மூலம்  மகிந்தராஜபக்ச சந்தித்துள்ள நெருக்கடியை திசைதிருப்புவதற்காக இதனை செய்தாரா என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.